×

அமலாக்கத்துறை, சிபிஐ அதிகாரிகள் கேட்ட கேள்வியையே திரும்ப திரும்ப கேட்குறாங்க! அடிக்கடி சம்மன் அனுப்புவது குறித்து அபிஷேக் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அமலாக்கத்துறை, சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே கேட்ட கேள்வியையே திரும்ப திரும்ப கேட்கின்றனர் என்று திரிணாமுல் எம்பி அபிஷேக் பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரும், எம்பியுமான அபிஷேக் பானர்ஜி, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘எனக்கும், எனது மனைவி ருஜிராவுக்கும் அமலாக்க இயக்குநரகம், சிபிஐ அமைப்புகள் பலமுறை சம்மன் அனுப்பி உள்ளன.

அவர்கள் ஏற்கனவே கேட்ட கேள்விகளையே மீண்டும் மீண்டும் கேட்கின்றனர். ஏற்கனவே அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில்கள் கொடுக்கப்பட்டன. எங்களை பற்றிய அனைத்து தகவல்களும் விசாரணை அமைப்புகளிடம் இருந்தபோதிலும், அவர்கள் மத்திய ஏஜென்சிகளில் பணியாற்றும் உயர்மட்ட அதிகாரி ஒருவரிடம் இருந்து வரும் அழுத்தத்தின் அடிப்படையில் எங்களுக்கு எதிராக தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகின்றனர். எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளதால் ஆளும் பாஜகவின் அடித்தளம் ஆட்டம் கண்டுள்ளது.

கடந்த 13ம் தேதி டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நான் பங்கேற்பதை தடுக்கவே, எனக்கு எதிராக அன்றை தினத்தில் சம்மன் அனுப்பப்பட்டது’ என்றார். முன்னதாக மேற்குவங்க மாநில அரசுப் பள்ளி பணி நியமன விசயத்தில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவை அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

The post அமலாக்கத்துறை, சிபிஐ அதிகாரிகள் கேட்ட கேள்வியையே திரும்ப திரும்ப கேட்குறாங்க! அடிக்கடி சம்மன் அனுப்புவது குறித்து அபிஷேக் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Enforcement ,CPI ,Abhishek ,Samman ,New Delhi ,Trinamool ,Abishek Panerjei ,Department of Enforcement ,CBI ,Enforcement Department ,
× RELATED டெல்லி மதுபான கொள்கை முறைகேடு...